Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூறலாம் , புலிகள் இயக்கத்தை நினைவுகூற விடமாட்டோம் : அரசாங்கம்

யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூறலாம் , புலிகள் இயக்கத்தை நினைவுகூற விடமாட்டோம் : அரசாங்கம்

விடுதலைப் புலிகளை நினைவு கூற அரசாங்கம்  இடமளிக்காது எனவும் அவ்வாறு யாரேனும் நினைவு கூற முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமென பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்த பொது மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வுகளை நடத்த எந்த தடையும் கிடையாது ஆனால் யாரேனும் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனையோ அல்லது விடுதலைப் புலி இயக்கத்தை சேர்ந்தவர்களையோ நினைவுகூற முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படும். என அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *