Search
Monday 19 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யுவராஜ் சிங் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

யுவராஜ் சிங்  ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னணி வீரரான யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் அவர் ஊடகங்களுக்கு முன்னால் இதனை அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் எனக்கு அதிகமாக கற்றுக் கொடுத்துள்ளது. போராட கற்றுக்கொடுத்தது. எப்போது எல்லாம் கீழே விழுந்தேனோ அப்போதெல்லாம் எழுந்து நிற்கவும், மீண்டும் முன்நோக்கி செல்ல ஊக்குவிப்பதாகவும் இருந்தது. 2011 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது என ஓய்வு அறிவிப்பின் போது கூறினார்.
40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள், 58 20 ஓவர் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய யுவராஜ் சிங்கின் இந்த அறிவிப்பு இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *