Search
Friday 17 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரஞ்சனின் தொலைபேசி குரல் பதிவுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்!

ரஞ்சனின் தொலைபேசி குரல் பதிவுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்!

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சர்ச்சைக்குறிய தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இன்று திங்கட்கிழமை முதல் அந்த குரல் பதிவுகள் அரச இரசாயணப் பகுப்பாய்வு திணைக்களத்தினால் ஆராயப்படவுள்ளன.
ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இருவட்டுக்கள் அடங்கிய பொருட்களை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திடம் முன்வைத்து அது தொடர்பான அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
அதற்கமைவாக கைப்பற்றப்பட்ட இருவட்டுக்கள் அடங்கிய பொருட்களை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திடம், குற்றப்புலனாய்வு பிரிவு ஒப்படைத்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவினால் பல்வேறு நபர்களுடன் மேற்கொண்ட 125,000 தொலைபேசி உரையாடல் பதிவுகள் சிக்கியுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *