Search
Friday 28 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரஞ்சனின் விவகாரம் கட்சியை விட பலரது வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் – சஜித் பிரேமதாச

ரஞ்சனின் விவகாரம் கட்சியை விட பலரது வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் – சஜித் பிரேமதாச

கண்டி தலதா மாளிகையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட சஜித் பிரேமதாச ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது பொதுத்தேர்தலில் எங்களது செயற்பாடுகள் தொடர்பாக கூறுவதற்கு முன்னர் புதிய மாற்றமொன்றை கொண்டு வருவதற்கு மக்கள் தயாராக இருக்கின்றார்களா என்பதையே அறிந்துக்கொள்ள விரும்புகின்றேன்.மேலும் நாட்டின் உண்மைகளை உணர்ந்து மக்கள் பொதுத்தேர்தல் ஊடாக எங்களுக்கு அதிகாரத்தை வழங்கினால், அவர்களுக்கு தேவையான அபிவிருத்தி செயற்பாடுகள் உட்பட நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை எம்மால் வழங்க முடியும் என தெரிவித்தார்.

அத்துடன் ரஞ்சனின் விவகாரம் கட்சியை விட பலரது வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஏற்படுத்துமெனவும் எனவே ரஞ்சன் விவகாரம் தொடர்பாக நான் எந்ததொரு கருத்தையும் வெளியிடவேண்டிய தேவை கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *