Search
Tuesday 7 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரஞ்சன் சபைக்கு சமர்பித்த குரல் பதிவுகளில் அமைச்சர்களின் மனைவிமாரின் குரல் பதிவுகள்

ரஞ்சன் சபைக்கு சமர்பித்த குரல் பதிவுகளில் அமைச்சர்களின் மனைவிமாரின் குரல் பதிவுகள்

தன்னால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள குரல் பதிவுகளில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , இராஜங்க அமைச்சர்களான எஸ்.பி.திஸாநாயக்க , தயாசிறி ஜயசேகர மற்றும் விமல் வீரவன்சவினதும் மகிந்தனந்த அலுத்கமகேவினதும் மனைவிமாரினதும் தொலைபேசி உரையாடல் பதிவுகளும் உள்ளடங்குவதாக ரஞ்சன் ராமநாயக்க எம்.பி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
இதன்படி அந்த குரல்பதிவுகளில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் இரண்டு குரல் பதிவுகளும் , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குரல் பதிவு ஒன்றும் , எஸ்.பி.திஸாநாயக்கவின் குரல் பதிவு ஒன்றும் , மகிந்தானந்த அலுத்கமகேவின் மனைவி ஆசா அலுத்கமவேவின் குரல் பதிவுகள் இரண்டும் , விமல் வீரவன்சவின் மனைவியின் குரல் பதிவு ஒன்றும் மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் குரல் பதிவு ஒன்றும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *