Search
Friday 18 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரணிலால் சம்பந்தனுக்கு வழங்கபட்ட உத்தரவாதமே அரசாங்த்துக்கு 119 வாக்குகள் கிடைக்க காரணம் : அனுர

ரணிலால் சம்பந்தனுக்கு வழங்கபட்ட உத்தரவாதமே அரசாங்த்துக்கு 119 வாக்குகள் கிடைக்க காரணம் :  அனுர

ரணில் சம்பந்தனுக்கு வழங்கிய எழுத்து மூல உத்தரவாதமே அரசாங்கத்திற்கு 119 வாக்குகள் கிடைக்க காரணம் என்றும் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

மகிந்த ராஜபக்‌ஷவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சரியான தீர்மானமொன்றை எடுத்திருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிப் பெற்றிருக்கலாம் . மாலை 4.30 மணிக்கே வெற்றிவாய்ப்பு பறிபோயுள்ளது. கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என்ற எழுத்துமூல உத்தரவாதத்தை பிரதமரால் சம்பந்தனுக்கு வழங்கபட்டுள்ளது. மறுபுறத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் அரை மணிநேரத்துக்குள் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். இதனை தொடர்ந்தே 119 வாக்குகளை அரசாங்கம் பெற்றது. இல்லையேல் 105 வாக்குகளே கிடைத்திருக்கும்.  என அவர் கூறினார். (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *