Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரணிலின் விருந்துபசாரத்தில் நடந்தது என்ன?

ரணிலின் விருந்துபசாரத்தில் நடந்தது என்ன?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று இரவு அலரிமாளிகையில் நடத்தப்பட்ட இராப்போசன விருந்துபசாரத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக நேற்று மாலை மாத்தறையில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு சென்றிருந்த எம்.பிக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணியினர் ,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களும் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
எவ்வாறாயினும் இங்கு அரசியல் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவில்லையென கூறப்படுகின்றது.
மாத்தறை கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த ஹர்ஷடி சில்வா , இரான் விக்கிரமரட்ன , அஜித் பி பெரேரா ஆகியோர் கலந்துக்கொண்டிருந்த போதும் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் மற்றும் அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்துக்கொண்டிருக்கவில்லை.
இங்கு விருந்துபசாரத்தில் சிலர் குடும்பத்துடன் வருகை தந்திருந்ததுடன் சிலர் தனியாக சென்றிருந்தனர். இங்கு எல்லோரும் ஒருவருக்கொருவர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். இதன்போது அரசியல் விடயங்கள் தொடர்பாக ஒருவொருக்கொருவர் இரகசியமான முறையிலேயே கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *