Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரணிலை பாதுகாக்க சுமந்திரன் முயலக் கூடாது : சு.க எச்சரிக்கை!

ரணிலை பாதுகாக்க சுமந்திரன் முயலக் கூடாது : சு.க எச்சரிக்கை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தேசிய கூடட்டமைப்பினர் ஆதரிக்க கூடாது எனவும் கூட்டு அரசாங்கம் இருக்க வேண்டுமென கருதினால் நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமருக்கு எதிராகவே வாக்களிக்க வேண்டுமெனவும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை சுமந்திரனின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்லவெனவும் அவர் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் போன்றே செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமைகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் நிலைப்பாடுகள் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களினால் கேள்விகள் எழுப்பபட்ட போது அது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
முதலில் கருத்து தெரிவித்த டிலான் பெரேரா தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த விடயத்தில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். அந்த கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் கூறும் கருத்துக்கள் அந்த கட்சியின் நிலைப்பாடு அல்ல. மற்றைய எம்.பிக்கள் வேறு ஒன்றை கூறும் போது சுமந்திரன் வேறு ஒன்றையே கூறுவார். ஐ.தே.கவின் சுமந்திரனாக ஒரு கருத்தும் , த.தே.கூவின் சுமந்திரனாக இன்னுமொரு கருத்தையுமே அவர் கூறுவார். பிரதமரை ஆதரிப்பதாக நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக முதலில் கூறப்பட்ட போதும் பின்னர் இன்னும் தீர்மானம் இல்லை 2ஆம் திகதியே தீர்மானிக்கப்படும். என கூறுகின்றார். அடுத்த பொதுத் தேர்தலில் ஐ.தே.கவின் தேசியப்பட்டியல் எம்.பியாகவே இவர் இருப்பார். இதன்படி சுமந்திரனின் தீர்மானத்தைவிட மற்றைய உறுப்பினர்களின் தீர்மானமே முக்கியமானது.
வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் குறைவடைந்துள்ளது. அந்த வாக்குகள் டக்லஸ் , கஜேந்திரக குமார் தரப்புக்கும் மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குமே கிடைத்துள்ளது. ஆனால் ஐ.தே.கவுக்கு கிடைக்கவில்லை. இதன்படி அங்குள்ள மக்கள் ஐ.தே.கவை எதிர்க்கின்றனர். இதனால் மக்களின் நிலைப்பாடுகளை அறிந்து அவர்கள் செயற்பாடுவார்கள். எவ்வாறாயினும் ஶ்ரீகொத்தாவிலிருந்து எடுக்கும் தீர்மானங்களுக்கமைய கூட்டமைப்பு தீர்மானம் எடுக்காது என நம்புகின்றோம். இதன்படி பதவி விலகுமாறு அவர்கள் பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
அதன்போது கருத்து தெரிவித்த இராஜங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்பார்க்கும் தீர்வு என்ன? அதனை பெற வேண்டுமென்றால் கூட்டு அரசாங்கம் இருக்க வேண்டும். கூட்டு அரசாங்கம் இன்றி எந்த தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது. இதனை அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இதனால் இந்த அரசாங்கத்தை பாதுகாக்க அவர்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாக அமையும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *