Search
Saturday 24 February 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்குங்கள் : ஜனாதிபதிக்கு கோரிக்கை

ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்குங்கள் :  ஜனாதிபதிக்கு கோரிக்கை

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குமாறு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரால் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.தே.க – ஶ்ரீ.ல.சு.க இணைந்து முன்னெடுத்துச் செல்லும் தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்த செல்ல வேண்டுமென்றால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டுமென ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார விடயங்கள் தொடர்பான வேலைத்திட்டங்கள் மற்றும் பிணை முறி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆகியனவே இந்த தேர்தலில் அரசாங்க தரப்பினர் தோல்வியடைய காரணமெனவும் இதனால் அவரை அந்த பதவியிலிருந்து நீக்கி வேறு ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *