Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரணில் உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அரசியல் பழிவாங்கல் குழுவுக்கு அழைப்பு!

ரணில் உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அரசியல் பழிவாங்கல் குழுவுக்கு அழைப்பு!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க , முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர , பாட்டலி சம்பிக்க ரணவக்க , மலிக் சமரவிக்கிரமச ஆகியோர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இவர்களுடன் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் விசாரணைக்காக இன்றைய தினத்தில் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி இன்று முற்பகல் இவர்கள் அந்த ஆணைக்குழுவில் ஆஜராகி தமது வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
திவிநெகுவ திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டே இவர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *