Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை

ரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் , சபாநாயகர் கருஜயசூரியவுக்கும் மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரையில் அலரிமாளிகையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது 19ஆவது திருத்தம் , நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் அதன்பின்னர் சஜித் பிரேமதாசவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *