Search
Monday 22 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரயில்களில் யாசகம் பெற்று வந்த கண் பார்வையற்ற பெண்ணிடம் 3 வீடுகள், வங்கியில் 5 இலட்சம் ரூபா

ரயில்களில் யாசகம் பெற்று வந்த கண் பார்வையற்ற பெண்ணிடம் 3 வீடுகள், வங்கியில் 5 இலட்சம் ரூபா

கம்பஹா நகரில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த 25 வருடங்களாக யாசகம் பெற்று வந்த கண் பார்வையற்ற 65 வயதுடைய பெண் ஒருவர், சொந்தமாக 3 வீடுகளை வைத்திருப்பதும், அவரது வங்கிக் கணக்கில் ஐந்து இலட்சம் ரூபா பணம் இருப்பதும், தெரியவந்துள்ளது. ரயில்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.இவர் யாசகம் பெறுவது தனது மகள்களுக்கும் தெரியும் என்றும், அவரது மருமகன்கள் நல்ல வேலைகளில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த திங்கட்கிழமைறு அவரை கைது செய்த நிலையில் அவரது மகள்களில் ஒருவர் வந்து அவரை பார்த்துச் சென்றதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.இதையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அவர் கம்பஹா மற்றும் கோட்டை ரயில் நிலையங்களுக்கிடையில் யாசம் பெற்று வருவதாகவும் நாள் ஒன்றுக்கு சுமார் 4000 ரூபாவும் மாதத்திற்கு 150,000 ரூபா பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 25 வருடங்களாக யாசகம் பெற்று வந்த குறித்த வயோதிபப் பெண் அதன் மூலம் கிடைத்த பணத்தில் குறித்த 3 வீடுகளையும் கட்டியதாகத் தெரிவித்துள்ளார். அவற்றில் 2 வீடுகளை அவரது மகள்களுக்கு வழங்கியுள்ளதாகவும் மூன்றாவது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.அத்துடன் அவரது வங்கிக் கணக்கில் ஐந்து இலட்சம் ரூபா பணம் இருப்பதும், தெரியவந்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *