Search
Monday 23 October 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரயில் சாரதிகளின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

ரயில் சாரதிகளின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையே இன்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
முற்பகல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிவடைந்தன.
இதனை தொடர்ந்து ஜனாதிபதியின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன் இதன்போது ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தீர்வுகள் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *