Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரயில் விபத்து தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்

ரயில் விபத்து தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்

பொல்காஹவெல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து அமைச்சரின் உத்தரவுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விபத்தில் 20ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
தற்போது அந்த பாதையினூடாக ரயில் போக்குவரத்துக்களை வழமைக்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *