Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கைது

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கைது

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.இன்று அதிகாலை 4.37 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த உதயங்க வீரதுங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.இந்நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ள ரஸ்யாவிற்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மிக் விமான கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பாக அவரை கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *