Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ராஜபக்‌ஷக்களின் தோல்வி உறுதியானது : என்கிறார் மங்கள

ராஜபக்‌ஷக்களின் தோல்வி உறுதியானது : என்கிறார் மங்கள

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோதாபய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த தெரிவின்படி ராஜபக்‌ஷ குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகவும் அவரின் சகோதரர் பிரதமராகவும் மற்றைய சகோதரர் சபாநாயகராகவும் , இன்னுமொரு சகோதரர் பொருளாதாரத்தை கையாள்பவராகவும் ஆகும் கொள்கையின்படியே இவ்வாறாக ஜனாதிபதி வேட்பாளர் தெரிவாகியுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோதாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக 11 பில்லியன் ரூபா மற்றும் 33 மில்லியன் ரூபா ஊழல் மோசடி தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலைமையில் அடுத்த ஜனாதிபதியாக ராஜபக்‌ஷக்களுக்கு வர முடியாது எனவும் ஐக்கிய தேசிய கட்சியினால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்படும் வேட்பாளரே இறுதியில் வெற்றிப் பெறுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *