Search
Monday 16 September 2019
  • :
  • :

ராஜபக்‌ஷக்களுக்கு எதிரான அலையை ஏற்படுத்தப் போகும் ஜே.வி.பியின் வேட்பாளர் யார்?

ராஜபக்‌ஷக்களுக்கு எதிரான அலையை ஏற்படுத்தப் போகும் ஜே.வி.பியின் வேட்பாளர் யார்?

ஜே.வி.பி தரப்பினரின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படவுள்ளார்.
நாளை மாலை கொழும்பு காலி முகத்திடலில் கூட்டமொன்றை நடத்தி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.
கட்சிகள் பல தங்களுடன் இணைந்துள்ளதாகவும் இதன்படி அந்த கட்சிகளின் இணக்கப்பாட்டுக்கமைய வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
இவ்வாறாக அறிவிக்கப்படவுள்ள வேட்பாளர் ராஜபக்‌ஷக்களுக்கு சவால் விடுக்கும் வேட்பாளராகவே இருப்பார் என்பதுடன் அவருடன் ராஜபக்‌ஷக்களுக்கு எதிரான புதிய அலையொன்று உருவாகுமெனவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி தரப்பு வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ள போதும் அந்த கட்சி இது வரையில் அதனை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *