Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ராஜிதவின் பிணை உத்தரவு இரத்து

ராஜிதவின் பிணை உத்தரவு இரத்து

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளைவான் கடத்தல் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டை அடிப்படையாக கொண்டு ராஜித சேனாரட்ன கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் அந்த பிணை உத்தரவில் குறைபாடுகள் காணப்படுவதாகதெரிவித்து சட்டமா அதிபர் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த மறுசீரமைப்பு மனு தொடர்பாக தீர்ப்பு இன்று மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட போது பிணை உத்தரவு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *