Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரிஷாட் பாதுகாப்பு உடையுடன் பாராளுமன்றம் அழைத்து வரப்பட்டார்

ரிஷாட் பாதுகாப்பு உடையுடன் பாராளுமன்றம் அழைத்து வரப்பட்டார்

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக இன்று பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் விசேட சுகாதார பாதுகாப்பு உடை அணிவிக்கப்பட்டு அவர் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீர்கொழும்பு பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியே அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சியினர் சபாநாயகருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய இன்றைய தினத்தில் சபை அமர்வில் கலந்துகொள்வதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்பு உடையுடன் பாராளுமன்றம் அழைத்து வரப்பட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *