Search
Thursday 3 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரிஷாத்துக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை?

ரிஷாத்துக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை?

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான ரிஷாத் பதியூதின் மீண்டும் அமைச்சு பதவியை ஏற்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட நிலையில் அது பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னரே அவர் பதவி விலகியிருந்தமையினால் அந்த பிரேரணை எடுத்துக்கொள்ளப்படவில்லை.
எவ்வாறாயினும் அவர் நேற்று இரவு மீண்டும் அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு எதிரான பிரேரணை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக எதிர்க்கட்சியினர் ஆராய்ந்து வருவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *