Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரிஷாத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்த தயாராகும் ரத்தின தேரர்

ரிஷாத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்த தயாராகும் ரத்தின தேரர்

ரிஷாத் பதியூதின் மீண்டும் அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ள நிலையில் அதற்கு எதிராக தனது போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி அவர் இதனை அறிவித்துள்ளார்.
கடந்த ஜுன் மாத ஆரம்பத்தில் ரிஷாத்தை பதவி விலக்க வலியுறுத்தி கண்டி தலாதா மாளிகைக்கு முன்னால் அதுரலிய ரத்தின தேரர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில் ரிஷாத் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியிருந்தனர்.
எவ்வாறாயினும் நேற்று இரவு மீண்டும் ரிஷாத் பதியூதின் அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் தனது போராட்டத்தை ஆரம்பிக்க போவதாக ரத்தின தேரர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *