Search
Monday 19 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

லண்டனில் உன்னிகிருஷ்ணன், அப்துல் ஹமீட் மற்றும் பலர் கலந்துகொள்ளும் ‘அபூர்வ ராகங்கள் 2018’

லண்டனில் உன்னிகிருஷ்ணன், அப்துல் ஹமீட் மற்றும் பலர் கலந்துகொள்ளும் ‘அபூர்வ ராகங்கள் 2018’

Concern Sri Lanka Foundation எதிர்வரும் 06.10.2018 (சனிக்கிழமை ) அன்று லண்டனில் ஏற்பாடு செய்திருக்கும் “அபூர்வ ராகங்கள் – பாட்டுக்கு பாட்டு” நிகழ்ச்சியில் தென் இந்தியாவின் பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன், பிரபல பாடகிகளான சாரண்யா ஸ்ரீனிவாஸ் , வர்ஷா ஆகியோருடன் உலக தமிழ் அறிவிப்பாளர் பி.எச் அப்துல் ஹமீட் மற்றும் ஈழத்து கலைஞர்களும் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நிகழ்வு மூலம் சேகரிக்கப்படும் நிதி இலங்கையில் புலோலி அபிவிருத்தி அறக்கட்டளையின் “கல்விக்குக் கைகொடுப்போம்” திட்டத்தின்கீழ் தேவையுள்ள மாணவர்களுக்கான உதவி திட்டத்திற்கு பயன்படுத்தப்படவிருக்கிறது.

மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வு இரு பகுதிகளை கொண்டுள்ளது. ஒன்று பாட்டுக்குப்பாட்டு மற்றையது அபூர்வராகங்கள் இசை நிகழ்வு. பாட்டுக்குப்பட்டு நிகழ்வினை உலக புகழ்பெற்ற அறிவிப்பாளர் பி.எச் அப்துல் நடத்துகிறார். இதில் எவரும் கலந்துகொள்ளலாம். வரையறுக்கப்பட்ட போட்டியாளர்களே கலந்துகொள்ள முடியும் என்பதால் விரும்புபவர்கள் முன்கூட்டியே தமது பெயர்களை admin@concernsrilanka.org என்ற மின்னஞ்சல் ஊடாக அல்லது 07534 284 858 என்ற தொலைபேசி ஊடாக பதிவுசெய்யலாம்.

கீழ்வரும் இடங்களில் டிக்கட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம்:

• Abi Diamond – 020 8423 0055 (S. Harrow)
• Rising Sun – 020 8422 2575 (Sudbury Hill)
• Beauty Complex – 020 8697 1395 (Wembley-next to western Jewellers)
• Abi Fast Food – 020 8813 9494 (Southall)
• Leo Studio – 020 8428 2286 (Rayners lane)
• A&P Solicitors 020 3429 5110 (Rayners Lane)

Apoorva Raagangal_Leaflet_2018 New-page-002


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *