செய்திகள்

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்

நாட்டின் வடக்கு கிழக்கு திசையிலான வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் குறைந்த தாழமுக்க நிலை வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திணைக்களம் தெரிவிக்கையில் எதிர்வரும் 6 மணித்தியால காலப்பகுதியில் குறைந்த அழுத்தப் பிரதேச நிலை வலுடையும் என்றும் இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடல் பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, திடீரென்று கடல் கொந்தளித்தல், காற்றின் வேகமானது திடீரென்று அதிகரித்தல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
இதே வேளை இன்று பிற்பகல் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)