Search
Thursday 26 April 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடகொரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தைகள்- யோசனை வெளியிட்டது தென்கொரியா

வடகொரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தைகள்- யோசனை வெளியிட்டது தென்கொரியா

வடகொரியாவுடனான இராணுவ பதற்றத்தை தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான யோசனையை தென்கொரியா முன்வைத்துள்ளது
பதட்டத்தை குறைத்து கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக தென்கொரியாவும் வடகொரியாவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டியது அவசியம் என தென்கொரியாவின் ஓருமைப்படுத்தல் அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்
இருநாடுகளிற்கும் இடையில் உள்ள இராணுவ சூன்ய வலயத்தில் பேச்சுக்களை மேற்கொள்ள முடியும் எனவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா இணங்கினால் யூலை 21 ம் திகதி பேச்சுக்களை மேற்கொள்ளமுடியும் எனவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
தென்கொரியாவின் புதிய ஜனாதிபதிவடகொரியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்திவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *