Search
Friday 24 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடகொரியா அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும் பகுதி இடிந்துவிழுந்துள்ளது- சீனா அதிகாரிகள் தகவல்

வடகொரியா அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும் பகுதி இடிந்துவிழுந்துள்ளது- சீனா அதிகாரிகள் தகவல்

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதபரிசோதனைகள் காரணமாக வடகொரியா அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும் முக்கிய பகுதி இடிந்துவிழுந்துள்ளதாகவும் இதன் காரணமாக வடகொரியா ஆயுதபரிசோதனைகளில் ஈடுபடமுடியாத நிலை உருவாகியுள்ளது எனவும் சீனாவின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கதிர்வீச்சு கசிவு ஆபத்துள்ளதாகவும் சீனாவின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அணுவாயுத பரிசோதனைகளை இடைநிறுத்தப்போவதாக வடகொரிய கடந்த வாரம் அறிவித்துள்ள நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2006 ம் ஆண்டு பின்னர் வடகொரியா தனது ஆறு அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொண்ட பகுதியே சிதைவை சந்தித்துள்ளது.
இந்த பகுதி மலைகளிற்கு நடுவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *