Search
Tuesday 22 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடகொரியா அமெரிக்க தலைவர்கள் சந்திப்பு நிகழும்- வெள்ளை மாளிகை நம்பிக்கை

வடகொரியா அமெரிக்க தலைவர்கள் சந்திப்பு நிகழும்- வெள்ளை மாளிகை நம்பிக்கை

வடகொரியா எச்சரித்துள்ள போதிலும் வடகொரிய அமெரிக்க தலைவர்கள் மத்தியிலான உச்சிமாநாடு நடைபெறும் என வெள்ளை மாளிகை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
வடகொரியா அணுவாயுதங்களை கைவிடவேண்டும் என அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக வற்புறுத்தினால் அமெரிக்க ஜனாதிபதியுடனான உச்சி மாநாடு குறித்து மீள் பரிசீலனை செய்யவேண்டியிருக்கும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் தென்கொரியாவுடனான சந்திப்பையும் வடகொரியா இரத்துச்செய்துள்ளது.
வடகொரியாவின் உத்தியோகபூர்வ செய்திஸ்தாபனமான கேஎன்சிஏ இதனை தெரிவித்துள்ளது
தென்கொரியாவுடன் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தைகளை கைவிட்டுள்ளதாக வடகொரிய செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
வடகொரியா ஒருதலைப்பட்சமாக அணுவாயுதங்களை கைவிடவேண்டும் என அமெரிக்கா தொடர்ந்தும் வற்புறுத்தினால் அமெரிக்க வடகொரிய தலைவர்கள் மத்தியிலான உச்சிமாநாடு குறித்து என்ன முடிவை எடுப்பது என்பது குறித்து தெளிவாகவுள்ளோம் என வடகொரியா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் என கேஎன்சீஏ செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
நாங்கள் ஒரு தலைப்பட்சமாக அணுவாயுதங்களை கைவிடுவதற்காக அமெரி;க்கா எங்களை அடிபணிய வைக்க முயன்றால் நாங்கள் பேச்சுவார்த்தைகளில் ஆர்வம் காட்ட மாட்டோம், உச்சிமாநாடு குறித்து மீள்பரிசீலனை செய்வோம் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார் என கேஎன்சீஏ செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் டிரம்ப் பேச்சுவார்த்தைகளிற்கு தயாராகவுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்கள் மத்தியிலான சந்திப்பு இடம்பெற்றால் அதற்கு ஜனாதிபதி தயார் அவ்வாறான சந்திப்பொன்று இடம்பெறாத பட்சத்தில் நாங்கள் தொடர்ந்தும் வடகொரியா மீது கடும் அழுத்தங்களை கொடுப்போம் என வெள்ளை மாளிகை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *