Search
Wednesday 27 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்த வேளை அலைமோதிய மக்கள்கூட்டம் (படங்கள் இணைப்பு )

வடக்கில் ஊரடங்கு  உத்தரவு தளர்த்தப்பட்டிருந்த வேளை அலைமோதிய மக்கள்கூட்டம் (படங்கள் இணைப்பு )

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுக்கடுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் மணித்தியாலங்கள் நடைமுறையிலிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதில் அலைமோதினர்.அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் பலசரக்குக் கடைகள், சந்தைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியவசியத் தேவைகளுக்கான இடங்களில் அதிகளவான மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.

இதேவேளை, வங்கிச் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் இருந்ததுடன் குறித்த சேவையை பெற்றுக்கொள்வதற்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதன்போது பொருள் கொள்வனவில் ஈடுபடுபவர்களை மூன்று அடி தூரம் தள்ளி நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைய வடக்கில் மக்கள் அவ்வாறு நின்றதை அவதானிக்க முடிந்தது.மேலும் குறிப்பாக பலசரக்கு கடைகள் ,மற்றும் மரக்கறி சந்தைகள் ,எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான இடங்களிலே அதிகளவான மக்கள் ஒன்று கூடி இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக பொலிசார், இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக வருகைதரும் மக்களுக்கிடையிலான இடைவெளிகளை ஏற்படுத்தி பல்வேறு சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக அவர்களுடைய கடமைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்ற போதும் மக்கள் கூட்டம் மிக அதிகமான அளவிலே வருகை தருவதால் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து வந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.(15)Curfew-Release-Time-Jaffna-Situation-Coronavirus-Alert-Situation-8-1536x1152 Curfew-Release-Time-Jaffna-Situation-Coronavirus-Alert-Situation-11-1536x1152 Curfew-Release-Time-Jaffna-Situation-Coronavirus-Alert-Situation-13-1536x1152 Curfew-Release-Time-Jaffna-Situation-Coronavirus-Alert-Situation-14-1536x1152 Curfew-Release-Time-Kilinochchi-Situation-Coronavirus-Alert-Situation-6 Curfew-Release-Time-Kilinochchi-Situation-Coronavirus-Alert-Situation-9 Curfew-Release-Time-Mannar-Situation-Coronavirus-Alert-Situation-4 Curfew-Release-Time-Vavuniya-Situation-Coronavirus-Alert-Situation-2-1536x1152


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *