Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கில் கடும் மழை பெய்வதற்காக சாத்தியங்கள்-வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கில் கடும் மழை பெய்வதற்காக சாத்தியங்கள்-வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்வதற்காக சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, உள்ளிட்ட அனுராதபுரம் மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் வடக்கு,கிழக்கில் கடந்த சில வாரங்களாக நிலவிவரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *