Search
Wednesday 27 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கில் போதைவஸ்து, சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு சமுதாய ஒத்துழைப்பு பொலிசாருக்கு தேவை!

வடக்கில் போதைவஸ்து, சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு சமுதாய ஒத்துழைப்பு பொலிசாருக்கு தேவை!

வடக்கில் போதைவஸ்து, சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு சமுதாய ஒத்துழைப்பு பொலிசாருக்கு தேவை என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட சமுதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற தென்னஞ்சோலை மரநடுகைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து தமிழில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமுதாய பொலிஸ் முறைமை என்பதைப் பற்றி இலங்கையின் மற்ற பிரதேசங்களைப் போல் வடக்கு மக்களும் தெரிந்து கொண்டுள்ளார்கள். நிரந்தர சமாதானம், அமைதி மற்றும் நல்லிணக்கம் என்பவற்றுக்கு சமுதாய பொலிச் சேவை அவசியம். இலங்கை பொலிசாரின் நடமாடும் பொலிஸ் சேவை மூலம் நான்கு கோடி பெறுமதியான சேவை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நன்மைக்காவும், நாட்டின் அபிவிருத்திக்காகவும் நாடு பூராகவும் இவ்வாறு பொலிசார் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்த வேலைத்திட்டம் மூலம் வடக்கு மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் சிறந்த இணைப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கில் போதைவஸ்து, சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு சமுதாய ஒத்துழைப்பு பொலிசாருக்கு தேவை. இலங்கை பொலிஸ் இந்த நாட்டு மக்களின் பொலிஸ். அதைப் பாதுகாப்பது பொதுமக்களின் கடமை. சமுதாய பொலிஸ் சேவை மூலம் வடக்கு மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் எதிர்காலம் சிறப்பாக அமையும் என நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *