Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கில் 3 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கே – நலின் பண்டார

வடக்கில் 3 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கே – நலின் பண்டார

கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கில் 3இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கே கிடைக்குமென அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 3 இலட்சத்திற்கு அதிகமான வாக்குகள் சஜித் பிரேமதாசவிற்கு கிடைக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாமல் ராஜபக்ஷ, தென்னிலங்கையில் ஒருவகையான கருத்துக்களையும் வடக்கில் வந்து ஒருவகையான கருத்துக்களையும் கூறுகின்றார்.ஆனால் சஜித் பிரேமதாச, அவ்வாறு இல்லை. தெற்கில் சொல்வதையே வடக்கிலும் சொல்வார். யாழ்ப்பாணம் விமான நிலையம் தொடர்பாக தென்னிலங்கையில் ஒருவகையான இனவாதம் பேசப்பட்டது.

அதேநேரம் வடக்கில் நாமல் இன்னொருவகையில் கருத்து தெரிவித்தார். இவர்கள் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு வகையான கருத்துக்களை கூறுகின்றனர்.இதேவேளை வடக்கில் பல பகுதிகளிலும் சஜித் பிரேமதாச, பிரச்சார கூட்டங்களில் பங்குகொள்ள உள்ளார். அவரை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *