Search
Saturday 22 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் இடங்களை பாதுகாக்க பிரதமர் உத்தரவு

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் இடங்களை பாதுகாக்க பிரதமர் உத்தரவு

அகில இலங்கை பிக்குகள் அமைப்பு நேற்று அலரி மாளிகையில் புத்த சாசனம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட சந்தித்தனர்.இதன்போது, கடலை அண்டிய விகாரைகள், யாழ்ப்பாணத்தின் வரலாற்று இடங்கள், நெடுந்தீவில் உள்ள பண்டைய விகாரை, முல்லைதீவில் உள்ள கருகந்த விகாரை மற்றும் பிற தொல்பொருள் இடங்கள் குறித்து தொல்பொருள் அதிகாரிகளுடன் கலந்துரையாடி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கலாச்சார அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் இடங்கள் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களை எல்லைகளிட்டு பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *