Search
Tuesday 26 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கு கிழக்கில் தொடரும் கடும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடக்கு கிழக்கில் தொடரும் கடும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீரின் அளவு உயர்ந்துள்ளமை காரணமாக வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் வன்னியில் உள்ள அக்கராயன்குளம், முறிப்புக் குளம் முதலியவற்றின் நீர் நிலைகளும் உயர்ந்துள்ளதாக நீர்பபாசன திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சியில் நேற்று புதன் கிழமை ஆரம்பித்த அடை மழை தொடர்ந்து பொய்து வருகின்றமை காரணமாக வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்படலாம் என் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வடக்கு கிழக்கில் நீடித்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் கடந்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக இயல்புக்கு மாறான காலநிலை காணப்படுகின்றது. இந் நிலையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் கடும் மழை பெய்து வருகின்றது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைந்து காணப்பட்டதுடன் அரச திணைக்களங்களின் அன்றாடச் செயற்பாடு மற்றும் பல்வேறு தொழில்துறை சார்ந்த நடவடிக்கைகளிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *