Search
Thursday 19 July 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கு , கிழக்கு மக்களின் அபிவிருத்திக்காவே நான் அமைச்சு பதவியை ஏற்றேன்

வடக்கு , கிழக்கு மக்களின் அபிவிருத்திக்காவே நான் அமைச்சு பதவியை ஏற்றேன்

வடக்கு , கிழக்கு மக்களின் அபிவிருத்திக்காகவே தனக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாகவும் அதனை மக்களுக்காகவே பயன்படுத்துவேனே ஒழிய கட்சியை வளர்ப்பதற்காக அல்லவென விவசாய துறை பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தனது அமைச்சு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற தனது கடமைகளை பொறுப்பெற்கும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடகிழக்கிலுள்ள மக்களின் வருமை நிலைமையை உணர்ந்து அப்பிரதேசங்களில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எனக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டதே தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்காக அல்ல. அத்துடன் நாடளாவிய ரீதியில் விவசாயத்துறையை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பேன் என தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *