Search
Tuesday 19 February 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கு , கிழக்கை விட தெற்கிலேயே அதிகமான தொல்பொருட்கள் அழிக்கப்படுகின்றன : அரசாங்கம்

வடக்கு , கிழக்கை விட தெற்கிலேயே அதிகமான தொல்பொருட்கள் அழிக்கப்படுகின்றன : அரசாங்கம்

வடக்கை விட தெற்கிலேயே அதிகமான தொல்பொருட்கள் அழிக்கப்படுவதாக உயர்கல்வி மற்றும் கலாச்சார அமைச்சரான விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கு , கிழக்கில் தொல்பொருட்கள் அழிக்கப்படுவதாக சிலர் தனிப்பட்ட நோக்கங்களுக்காக மக்களிடையே இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் ஆனால் வடக்கில் கிழக்கில் ஒரு சில சம்பவங்களை தவிர வேறு சம்பவங்கள் பதிவாகவில்லையெனவும் ஆனால் அநுராதபுரம் , குருநாகல் உள்ளிட்ட பிரதேசங்களிலேயே அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வவுனியா உள்ளிட்ட பிரதேசங்களில் புத்தர் சிலைகள் மீது தார் வீசப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போதும் அந்த புத்தர் சிலைகள் அந்த பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைக்கும் போது தற்காலிகமாக வைக்கப்பட்டவையெனவும் ஆனால் இராணுவ முகாம்கள் அகற்ற போதும் அவை அங்கு அகற்றப்படாது அவ்வாறே இருப்பதாகவும் இந்நிலையில் தெற்கிலிருந்து செல்வோர் அதற்கு தாரை வீசி பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் தனது அமைச்சின் பொறுப்புகள் தொடர்பாக விளக்கமளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *