Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கு சட்டத்தரணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்

வடக்கு சட்டத்தரணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுருவின் பூதவுடைலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.எனினும், குறித்த தடை உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிராகவும், நீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனம் செய்த ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுமே நேற்று முந்தினம் முதல் வட மாகாண சட்டத்தரணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக வடக்கில் நீதிமன்றங்களின் சேவைகள் முடங்கியுள்ளன.இதன் காரணமாக வழக்குகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *