Search
Thursday 23 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கு தமிழ் மக்களுக்கு மல்வத்த பீடம் கடும் தொனியில் எச்சரிக்கை

வடக்கு தமிழ் மக்களுக்கு  மல்வத்த பீடம் கடும் தொனியில்  எச்சரிக்கை

முல்லைத்தீவு நீராவியடி ஆலய விவகாரத்தில் பௌத்த பிக்குமார்கள் செய்ததை நியாயப்படுத்தியிருக்கும் பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களில் ஒன்றான மல்வத்துப்பீடம், தெற்கு சிங்கள பௌத்த மக்களை மீண்டும் கலவரத் திசைக்கு திருப்புகின்ற முயற்சியிலிருந்து வடக்கு மக்கள் விலகிக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவங்கள் குறித்து இன்றைய தினம் மல்வத்துப்பீட துணைநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்மாபிதான தேரர் கருத்து வெளியிட்டிருக்கின்றார். தமிழ் மக்களின் இந்த செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்து அவர் கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் கட்டியிருக்கும் நாய்களை அவிழ்த்துவிட்டு ஐயோ கடிக்கிறதே என்று அலறுவதில் அர்த்தமில்லை. ஆகவே புத்திமிக்க யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மக்கள் சிந்தித்துப் பாருங்கள். அகிம்சையாக மக்களை குழப்பிவிட்டு மனங்களில் கோபத்தை ஏற்படுத்தி இந்த நாட்டை இரத்தம் சிந்துகின்ற நாடாக மாற்றவா முயற்சிக்கின்றீர்கள்? ஆட்சியாளர்கள் அச்சமின்றி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டு மக்கள் மறுமடியும் சட்டத்தைக் கையிலெடுத்துவிடுவார்கள் எனவும் அமைதிகாக்கும் பௌத்த மக்கள் பொறுமையாக இருக்கமாட்டார்கள். அதனால் இது மிகப்பெரிய அழிவாகவும் கலவரமாகவும் ஆகிவிடும். இந்த நிலைமையை கருத்திற்கொண்டு ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும். நான் ஒட்டுமொத்த பிக்குமார்களுக்காகவும் பேசுகின்றேன். மீண்டும் ஒருமுறை இந்த நாட்டை இரத்த ஆறாக மாற்றிவிட வேண்டாம் என கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *