Search
Wednesday 22 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கு மக்களின் பிரச்சினைகளை நாம் தீர்ப்போம் : கோதாபய

வடக்கு மக்களின் பிரச்சினைகளை நாம் தீர்ப்போம் : கோதாபய

வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தனது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்த விடமாட்டேன் என்பதுடன் சர்வதேசத்துக்கு அடிபணியவும் மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் அதன்போது மேலும் கூறியுள்ளதாவது,
வரையறைகளுக்கள் உட்படாது பொறுப்புகளை நிறைவேற்றினேன் – கோட்டா

நான் என்து நாட்டை நேசிக்கின்றேன். நான் எனது நாட்டைப் பற்றி பெருமிதம் கொள்கின்றேன். எனக்கு எனது நாடு பற்றிய எதிர்கால நோக்கு உள்ளது.

முழுமொத்த இலங்கை வாழ் மக்களுக்கும் தலைமைத்துவம் வழங்கி, தாய் நாட்டுக்கு சந்தோசம் மற்றும் சுபீட்சம் என்பவற்றை மலரச் செய்வதற்கு கிடைக்கப்பெறும் இந்த வாய்ப்பினை நான் மிகவும் மெச்சுகின்றேன்.

ஒப்படைக்கப்படும் எந்தவொரு பொறுப்பையும் உயர் மட்டத்தில் நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் தயங்காத நான், மக்கள் முன்னிலையில் இன்றுள்ள சவாலை வெற்றியடைய செய்வறத்கு தயாராக உள்ளேன், என்பதை உங்கள் முன்பாக மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன்.

நான் எப்போதும் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பினை வரையறுக்குள் உட்படாது, அங்கீகாரங்களுக்கு அப்பாற் சென்று அப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு முயற்சி எடுத்துள்ளேன்.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு அண்மித்தக் காலப் பகுதி நடைபெற்ற பயங்கரவாதத்தை 3 ½ ஆண்டுகள் போன்ற குறுகிய காலப் பகுதியில் முடிவுறுத்துவதற்கு, முப்படைத் தளபதியான மகிந்த ராஜபக்~ ஜனாதிபதி அவர்களுக்கு தேவையான மூலோபாய மற்றும் நிருவாக ஒத்துழைப்பினை வழங்குவதற்கு, எனக்கு இயன்றதற்கான காரணம் அப் பண்பு என்னிடம் இருந்தமையாகும்.

அதே போன்று பின்னரான காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக, கொழும்பு நகரத்தை ஆசியாவின் வேகமாக முன்னேற்றம் அடைந்து வரும் நகரமாக உறுவாக்குவதற்கும், நகரத்தின் தொடுவான ரேகையை மாற்றியமைக்கும்; மனம்கவரும் பல முதலீடுகளை கொண்டு வருவதற்கும், முடிந்தமைக்கான காரணம், நான் ஒருபோதும் வரையறைகளுக்கள் உட்படாது பொறுப்புகளை நிறைவேற்றியமையாகும்.

அன்று நாட்டுக்காக எனது பொறுப்புகளை நிறைவேற்றும்போது, எந்தவொரு வெளியக சக்திகளும் அதற்கு தடையேற்படுத்துவதற்கு நான் இடமளிக்கவில்லை.

எனது நாட்டை எதிர்பவர்களுக்கு நான் ஒருபோதும் தலை வணங்கியதில்லை.

எதிர் காலத்திலும் எனது தாய் நாட்டின் இறையாண்மைக்கு பாதகம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டேன்.

இன்று இந்த நாட்டுக்கு, எதிர் காலம் தொடர்பாக நோக்குகை உள்ள, நாட்டின் அபிவிருத்திக்கு திட்டமொன்று உள்ள, அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆற்றல் உள்ள ஒழுக்கமுடைய, ஊழல்களற்ற மக்கள் நேயத்துடனான, நாட்டுப்பற்றுடைய தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. ஒரு ஜனாதிபதியிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது அவ்வாறான தலைமைத்தவமாகும்.

நீங்கள் எதிர்பார்க்கும் தலைமைத்துவத்தை அளிக்கும் ஆற்றல் எனக்குள்ளது என்பதை நான் தற்போதும், எனது செயற்பாடுகள்மூலம் உறுதிப்படுத்தியுள்ளேன்.

எமது அரசாங்கத்தின் முதலாவது கடமைப் பொறுப்பு யாதெனில் நாட்டில் பூரண பாதுகாப்பினை உறுதிப்படுத்தலாகும்.

எமக்கு மீண்டும் இந்த நாட்டை உலகத்தில் பாதுகாப்பான நாடாக உருவாக்க முடியுமென நான் மிகவும் நம்பிக்கையுடன் கூறுகின்றேன்.

உங்களதும், உங்களது பிள்ளைகளதும் பாதுகாப்பின் பொறுப்பினை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

இந்த தாய் நாட்டில் பிறக்கும் எவரொருவரும் அச்சம, சந்தேகமின்றி வாழக் கூடியதான, பாதுகாப்பான சூழலை மீண்டும் கட்டியெழுப்புவேன் என்று நான் உறுதி கூறுகின்றேன்.

நான் ஒருபோதும் தீவிரவாத பயங்கரவாதத்திற்கு இடமளிக்க மாட்டேன்.

வடக்கு மக்களுக்கு தேவையான, விசேடமான எதிர்பார்ப்புகள் பற்றி எமக்கு நல்ல புரிந்துணர்வு உள்ளது. அவர்களின் இப் பிரச்சினைகளை எமது அரசாங்கத்தால் உறுதியாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

எமது பொருளாதார கொள்கையில் உள்நாட்டு வியாபாரங்களை பாதுகாத்து உலகளாவிய பொருளாதாரத்தில் புதிய சந்தை வாய்ப்புகளை கண்றிவதற்கு எதிர்பார்க்கின்றேன்.

மக்கள் நேயத்துடன்கூடிய, வினைத்திறனுடனான அரசாங்க சேவையினை உறுதிப்படுத்தல் அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பாகும்.

அதற்கு முதலாவதாக, அரசாங்க உத்தியோகதர்களை அரசியல் செல்வாக்குகளிலிருந்து விடுவிக்கபபடுதல் வேண்டும்.

தமது கடமைப் பொறுப்புகளை உரியவாறு நிறைவேற்றுவதற்கு தீர்மானங்களை மேற்கொள்கின்ற, நேர்மையான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தேவையான ஆகக்கூடிய சட்டத்துடனான பாதுகாப்பினை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

எமது நெறிமுறைகள் மற்றும் கலாச்சாரம், சுதேச சிந்தனை, தேசத்தின் இறையாண்மை எமக்கு மிகவும் முக்கியமாகும்.

நாம் எல்லா நாடுகளுடனும் நட்புறவை பேணுவதற்கு தயாராக உள்ளோம். ஆயினும், நாம் எந்தவொரு நாட்டுக்கும் எமது இறையாண்மையை காட்டிhக்கொடுப்பதற்கு தயாராக இருக்கமாட்டோம்.

ஆகையால் இராஜதந்திர உறவுகளின்போது, எந்தவொரு வெளிநாட்டுக்கும் முன்னே அடிபணியாத, நாட்டின் இறைமையை எப்போதும் பாதுகாக்கும், எந்தவொரு நாட்டுடனும் சம மட்டத்தில் கொடுக்கல் பேணப்படும்.
முன்னர் நிகழ்ந்த பிழைகளை சரிசெய்துகொள்வோம். அதேபோன்று நாம் பயணிக்கும் பயணத்தில் குறைப்பாடுகளை தேடிப்பார்த்து, துரிதமாக அதனை சரிசெய்துக் கொண்டு எமது நீண்டகால நோக்கத்தின்மீது செல்லுதல் வேண்டும்.

இதற்காக தனிப்பட்ட நோக்கங்களையும் பார்க்க, பொது நோக்கத்துடன் பணியாற்றும், முழுமனதுடன் நாட்டை ஆதரிக்கும், ஆக்கத்திறனுடன்கூடிய, திறமையான, அறிவுடன்கூடிய குழுவினரை எம்முடன் இணைத்துக்கொள்வதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

எதிர்வருங் காலத்தில் வருகின்ற ஜனாதிபதி தேர்தல் நாட்டுக்கு மிக முக்கியமாகும். அது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகும்.

ஆகையால் இத் தருவாயில் எமது நாட்டில் அனைத்து பிள்ளைகளினதும் எதிர்காலம் பொருட்டு கட்சி வேறுபாடின்றி கைகோர்த்துக்கொள்ளும்படி சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பர்கர் ஆகிய அனைத்து இனங்களுக்குரிய நாட்டுப் பற்றுமிக்க மக்களிடமிருந்து நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த முக்கியமான நாளில் நான் உங்களிடம் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றேன்.

இன்று முதல் நாம் இலங்கை வரலாற்றில் மற்றுமொரு வகையிலான சுதந்திர போராட்டத்தினை தொடங்குகின்றோம்.

நாம் எல்லோரும் எதிர்பார்ப்பது இந்த எதிர்கால சந்ததியினறுக்கு அபிமானத்துடன் வாழ்வதற்கு முடியுமான சுதந்திரமான, சுபீட்சமான நாட்டினை கட்டியெழுப்புதலாகும்.

அதற்கு தேவையான நோக்கு எமக்கு உள்ளது. நாம் அதற்கு தேவையான திட்டங்களை தற்போது தயாரித்துள்ளோம்.

இதுவரை பொறுப்பெற்ற எல்லா பொறுப்புகளையும் உயர்ந்த மட்டத்தில் நிறைவேற்றயவாறு இந்த முறையும் உங்கள் அனைவரும் முன்னிலையில் நான் கௌரவத்துடன் கூறுவது, இன்று நாட்டுக்கு தேவையாக உள்ள நீங்கள் அனைவரும் கேட்கும், அந்த தேசிய கடமையினை நிறைவேற்றுவதற்கு நான் தயாராக உள்ளேன். என கூறியுள்ளார்.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *