Search
Tuesday 15 January 2019
  • :
  • :

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக சுரேஷ் ராகவன் நியமனம்

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக சுரேஷ் ராகவன் நியமனம்

கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த பேராசிரியர் சுரேஷ் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதன்படி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று அவர் வடக்கு மாகாண ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

03 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.மேலும் ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சப்ரகமுவ மாகாண ஆளுநராக தாம திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *