Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநர் அச்சுறுத்தியதாக வைத்தியர் சத்தியமூர்த்தி குற்றச்சாட்டு

வடக்கு மாகாண ஆளுநர் அச்சுறுத்தியதாக வைத்தியர் சத்தியமூர்த்தி குற்றச்சாட்டு

வடக்கு மாகாண ஆளுநர் தன்னை அச்சுறுத்தியதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குற்றச்சாட்டு ஒன்றை பகிரங்கமாக முன்வைத்துள்ளார்.நான் கடமையைப் பொறுப்பேற்று 2 ஆவது வாரம் ஆளுநரின் செயலாளர் கூறியதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கடமையைச் செய்ய விடாது என்னைத் தடுத்தார். எனவே நான் மத்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை தொடர்பு கொண்டதுடன், அவரது பணிப்பில் கடமையைச் செய்ய முற்பட்ட போது மீண்டும் ஆளுநரின் செயலாளர் தடுத்தார்.தனது பணிகளைச் செய்யவிடாமல் ஆளுநரின் செயலாளர் தடுத்ததோடு, கடமைக்கு வரவேண்டாமென தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, 27.05.2019 அன்று ஆளுநரின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டேன். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தேவநேசன் ஆகியோர் பங்குபற்றினர். அக்கூட்டத்திலே ஆளுநர் என்னை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டார். கடமைக்கு வர வேண்டாம் என்றும் தடுத்தார்.இவ்வாறு ஆளுநர் தடுத்த போது நான் எழுத்து மூலம் அதனைத் தருமாறு கேட்டேன். ஆளுநர் கடிதத்தை தராமல் ஊடகங்களுக்குத் தவறான செய்தியை வெளியிட்டார்.

ஆளுநரின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னைக் கடமைக்கு வரவேண்டாம் என்றும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரைக் கடிதம் கொடுக்குமாறும் வற்புறுத்தியுள்ளார்” என்று வைத்தியர் த.சத்தியமூர்த்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளாராகக் கடமையாற்றிக் கொண்டு சில மணிநேரங்கள் யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் கடமையாற்றினாலும் பல விடயங்களை தன்னால் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ள அவர், சுகாதாரத் துறையில் 20 வருடங்கள் அனுபவம் உள்ளதோடு அதில் பல துறைகளில் தலைமைதாங்கி பணியாற்றியபோதும், பணிசெய்யவிடாது எவருமே தடுத்ததில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *