Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் இருந்து எம்மை காப்பாற்றுங்கள்-பண்ணைப் பகுதி மக்கள் போராட்டத்தில்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் இருந்து எம்மை காப்பாற்றுங்கள்-பண்ணைப் பகுதி மக்கள் போராட்டத்தில்

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தில் காலவதியான மருந்து பொருட்களை பிளாஸ்ரிக் போத்தல்களுடன் குழி தோண்டி அதனுள் போட்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு தீ மூட்டியுள்ளனர்.அதனால் பிளாஸ்ரிக் போத்தல்கள் எரிந்தும் , மருந்துகள் எரிந்தும் ஏற்பட்ட புகை மூட்டத்தால் நாற்றம் வீசியதுடன் அயலவர்களுக்கு ஒவ்வாமையும் ஏற்பட்டு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனர்.

அதனை அடுத்து அது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கும் அறிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் தீயினை அணைக்க முற்பட்ட போது அவர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டது. அதன் மத்தியிலும் பலத்த சிரமத்தின் மத்தியில் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் செயலைக் கண்டித்தும் தாம் உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பை வழங்குமாறு கோரியும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் இருந்து எம்மை காப்பாற்றுங்கள் எனக் கோரி பண்ணைப் பகுதி மக்கள் சுகாதார அமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *