Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு மூவர் குழு நியமனம்: முதலமைச்சர் அறிவிப்பு

வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு மூவர் குழு நியமனம்: முதலமைச்சர் அறிவிப்பு

வடமாகாண அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழு முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டு உள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது முதலமைச்சர் விசாரணைக்குழு தொடர்பில் சபைக்கு தெரியப்படுத்தினார்.

அதன் போது முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண அமைச்சர்கள் மீது பல்வேறு வகையான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள என குழு ஒன்றினை நியமித்து உள்ளேன்.

அக்குழு 6ம் திகதி முதல் தமது விசாரணைகளை முன்னெடுக்க உள்ளது. எதிர்வரும் மூன்று மாத கால பகுதிக்கு  வடமாகாண பிரதமர் செயலர் அலுவலகத்தில் , இக் குழு செயற்படும். எனவே அமைச்சர்கள் மீதான குற்ற சாட்டுக்கள் தொடர்பில் முறைப்பாடுகள் , ஆவணங்களை கையளிக்க விரும்புபவர்கள் அவற்றை இக் குழுவிடம் தாபல் மூலமாகவோ , நேரிலோ கையளிக்க முடியும்.

இக் குழுவில் முன்னாள் நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ் .பரமராஜா மற்றும் முன்னாள் யாழ்.மாவட்ட அரச அதிபர் கே.பத்மநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். குறித்த குழு அமைக்கப்படுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் வடமாகாண சபை அமர்வில் முதலமைச்சர் அனுமதி கோரி இருந்தார். அது தொடர்பில் சபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு சபையில் இரண்டு தினங்கள் கடும் விவாதம் நடைபெற்றது.

இரண்டு நாள் கடும் விவாதத்தின் பின்னர் இறுதியில் முதலமைச்சர் குழு அமைக்க சபையில் கோருகிறேன் எனும் வசனத்தில் குழு அமைக்க தீர்மானித்து உள்ளேன் என மற்றம் செய்ததை அடுத்து சபை அதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. அந்நிலையில் இரு மாத காலத்திற்கு பின்னர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
-06


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *