வடமாகாணத்தைச் சேர்ந்த மாற்று வலுவுள்ளோருக்கான சுப்பர் சிங்கர் இறுதிப் போட்டி 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளது திறன்களை வெளிக்கொணர களம் அமைக்கும் நோக்குடன் 24.08.2018 அன்று வரோட் என்றழைக்கப்படும் மாற்றுவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் மற்றும் யாழ் உடுவில் குபேரகா கலைமன்றம் இணைந்து மாற்றுத்திறனாளிக் கலைஞர்களுக்கான போட்டி நிகழ்வினை வரோட் நிறுவன வளாகத்தில் நடாத்தியது.
இந் நிகழ்வில் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தமாக 26 பயனாளிகள் பங்குபற்றினார்கள். அன்றைய நாளில் இரண்டு சுற்றுக்கள் இடம் பெற்றன. இச் சுற்றில் பாடல்கள் யாவும் கரோக்கி இசையுடன் இசைக்கப்பட்டு 13 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்காத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இதன் இறுதிச் சுற்றில் வாத்திய கலைஞர்களின் இசையுடன் இணைந்து நேரடியாக பாடல் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
N5