Search
Thursday 16 August 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடமாகாண வைத்தியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

வடமாகாண வைத்தியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டமையால் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக வடமாகாண மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை,கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டமையால் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக வடமாகாண மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது ஒழுக்காற்று விசாரணை துரிதப்படுத்தப்படாதவிடத்து மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டி வருமெனவும் அந்தச் சங்கம் மேலும் எச்சரித்துள்ளது.

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு உரிய வகையில் வைத்தியர்கள் நியமிக்கப்படவில்லை. அத்துடன் இங்கு நீண்டகாலம் சேவையிலுள்ளவர்களுக்கும் உரிய காலப் பகுதியில் இடமாற்றம் வழங்கப்படுவதில்லை. இதனால், வைத்தியர் பற்றாக்குறை நீண்டகாலமாக நிலவி வருகிறது.
இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கும், அமைச்சுக்கும் அறிவித்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை முழுமையாக நிவர்த்தி செய்யக் கோரி இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *