Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடிவேல் – ஹரீனுக்கு ரணில் தரப்பிலிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள தடை

வடிவேல் – ஹரீனுக்கு ரணில் தரப்பிலிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள தடை

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தின் சொத்துக்கள் மற்றும் நிதிகளை அந்த சங்கத்தின் தலைவர் ஹரீன் பெர்ணான்டோ மற்றும் செயலாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு பயன்படுத்த முடியாத வகையில் ஐக்கிய தேசிய கட்சியினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினூடாக இடைக்கால தடையுத்தரவை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் சங்கமான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பதவிகளில் இருக்கும் இவர்கள் இம்முறை பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் நிலையிலேயே அவர்களுக்கு அந்த சங்கத்தின் சொத்துக்கள் மற்றும் நிதியை பயன்படுத்த முடியாதவாறு தடையுத்தரவை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *