Search
Friday 27 April 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வட மாகாண ஆளுநராக மீண்டும் கடமைகளை பொறுப்பேற்றார் ரெஜினோல்ட் குரே

வட மாகாண ஆளுநராக மீண்டும் கடமைகளை பொறுப்பேற்றார் ரெஜினோல்ட் குரே

வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே மீண்டும் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

மாகாண ஆளுநர் மாற்றத்தின் போது வடக்கு மாகாண ஆளுநராகவிருந்த ரெஜினோல்ட் குரேவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றியிருந்தார்.இந்த நிலையில் மீண்டும் வட மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட வேண்டும் என பல தரப்புகளில் இருந்தும் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய வட மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரேவை ஜனாதிபதி மீண்டும் நியமித்திருந்தார்.இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த குரேக்கு பலாலியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் வட மாகாண ஆளுநராக தன்னுடைய கடமைகளை உத்தியோக பூர்வமாக அவர் பொறுப் பேற்றார்.இதன் போது, வட மாகாண மக்களுக்கு நன்றி தெரிவித்த ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எதிர்காலத்தில் மக்களுக்கு தன்னால் இயன்ற வரையான சேவைகளை வழங்கபோவதாகவும் குறிப்பிட்டார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *