Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வட மாகாண சபையின் தீர்மானத்தால் அரசாங்கத்திற்கு பிரச்சினை கிடையாது : லக்ஷ்மன் யாப்பா

வட மாகாண சபையின் தீர்மானத்தால் அரசாங்கத்திற்கு பிரச்சினை கிடையாது : லக்ஷ்மன் யாப்பா
யார் என்ன தீர்மானம் மேற்கொண்டாலும் சமஷ்டியென்பது நடக்காதவொன்றே எனவும் இதனால் வட மாகாண சபையின் தீர்மானம் தொடர்பாக அரசாங்கம் பிரச்சினையடைவில்லையெனவும் நிதி இராஜங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாகாண சபையிலும் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படலாம். ஆனால் அதனை இறுதியில் பாராளுமன்றமே நிறைவேற்ற வேண்டும். இதற்கிணங்க வடமாகாண சபையில் சமஷ்டி தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை செயற்படுத்த முடியாது. அதனை செயற்படுத்துவதென்றால் அதற்கென விதி முறைகள் உள்ளன. அதன்படியே நடக்க வேண்டும்.
அது  அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு , பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். அத்துடன் அரசியலமைப்பு மாற்றப்பட்டு அதில் இது குறிப்பிடப்பட வேண்டும். அதன்பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும்.
இவ்வாறான நிலைமையில் சமஷ்டி என்பது சாத்தியப்படாதவொன்றே. இதனால்  வட மாகாண சபையானாலும் சரி தமிழ் நாட்டில் ஜெயலலிதாவானாலும் சரி யார் எத்தனை தீர்மானத்தை மேற்கொண்டாலும் இது தொடர்பாக அரசாங்கத்திற்கு பிரச்சினை கிடையாது. என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *