Search
Tuesday 14 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வரக்காபொலவில் துப்பாக்கி சூடு : மகள் பலி – தாய் வைத்தியசாலையில்

வரக்காபொலவில் துப்பாக்கி சூடு : மகள் பலி – தாய் வைத்தியசாலையில்

வரக்காபொல கணேகம தொரவக்க பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த நபரொருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 வயது யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை அந்த யுவதியின் தாய் சுட்டுக் காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர் வீட்டிலிருந்த தாய் மீதும் மகள் மீதும் துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் மகள் இறந்ததுடன் தாய் காயமடைந்த நிலையில் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வரக்காபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *