Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
151 பேர் வரவு செலவு திட்டத்தை ஆதரித்தும், 52 பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர்.
இன்று மாலை 5.30 மணிக்கு அது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் அரசாங்க தரப்பினரும், எதிர்க்கட்சியை சேர்ந்த சிலருமாக 151 பேர் அதனை ஆதரித்து வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 52 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
இதன்படி வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
இதனை தொடர்ந்து திங்கட்கிழமை முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரையில் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்பட்டு 10 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *