Search
Friday 4 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வரிச்சலுகையால் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைப்பு

வரிச்சலுகையால் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைப்பு

அரசாங்கம் வற் வரியை குறைத்து, தேச நிர்மாண வரியை நீக்கியுள்ள நிலையில் அதன் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
பாண் தவிர்ந்த பணிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை 5 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த வரிச் சலுகை காரணமாக பேக்கரி உரிமையாளர்களுக்குக் கூடுதலான நன்மை கிடைத்திருப்பதாக அந்தச் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஜயவர்த்தன தெரிவித்தார். இந்த வரிச்சலுகை காரணமாக ஒரு கிலோ கேக்கின் விலை 50 ரூபாவால் குறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *