Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வரி அதிகரிப்புக்கு எதிராக வீதிக்கு இறங்க தயாராகும் ஜே.வி.பி

வரி அதிகரிப்புக்கு எதிராக வீதிக்கு  இறங்க தயாராகும் ஜே.வி.பி

மக்கள் மீது வரிச் சுமைகளை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கப்போவதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவே இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளதார கொள்கையில் சகல துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. ரூபாவின் விலை பாரியளவில் வீழ்ச்சி கண்டு டொலரின் பெறுமதி 147 ரூபா வரை அதிகரித்துள்ளது. நாடு பாரிய கடன் சுமைக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. அத்துடன்  சகல அத்தியாவசிய பொருட்கள் மீதான வரிகளும் அதிகரித்து காணப்படுகின்றன.

இவ்வாறான நிலைமையில் மே 2ஆம் திகதி முதல் வற் வரியை அதிகரித்துள்ளது. இதேவேளை அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை குறை நிரப்பு பிரேரணையொன்றையும் நிறைவேற்றியுள்ளது. இதன்படி அரசாங்கத்தினால் தனது பாவனைக்காக நிதி ஒதுக்கிக்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும் அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு செயற்பாடுகளை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதற்கு எமது எதிர்ப்பை வெளியிடும் அதேவேளை இது தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் அத்துடன் எதிர்வரும் வாரங்களில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *